கோவை, ஜன.
- 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்த வேண் டும் என வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வெள்ளி யன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்ற இந்த உண்ணா விரதப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின் போது, தனியார் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும். தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வருடாந்திர ஊதிய உயர்வு 16 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும், தாமதமின்றி குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், 8 மணி நேர வேலை முறையை அமல் படுத்த வேண்டும். பணியின் போது உயிரிழக்கும் ஊழியர்க ளின் குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும், நிர்வாக காப்பீட்டுத் தொகையாக 20 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இப்போராட்டத் தில் வலியுறுத்தப்பட்டன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?