news Breaking News
clock

சிறுமி பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை



உதகை, ஜன.

- 14 வயது சிறுமியை பாலியல் வன்கொ டுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது மகள், அதேபகுதியிலுள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்.21 ஆம் தேதியன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி, இரவு தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் சிறு மியை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் சிறுமி இல்லாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கூடலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதை யடுத்து நடைபெற்ற விசாரணையில், சிறு மியை அதேபகுதியை சேர்ந்த கலைச்செல் வன் (25) என்பவர் ஏமாற்றி, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி திருப்பூ ருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்துள்ளார். இதில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட் டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கலைச் செல்வனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விசா ரணை முடிந்து வியாழனன்று வழங்கப் பட்ட தீர்ப்பில், கலைச்செல்வன் மீதான குற் றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயி ரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க நீதி பதி பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து கலைச்செல்வன் கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.செந்தில்குமார் ஆஜ ராகி வாதாடினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News