news Breaking News
clock

சோலார் அமைக்க மானியம் வழங்க விசைத்தறி கூட்டமைப்பு கோரிக்கை

சோலார் அமைக்க மானியம் வழங்க விசைத்தறி கூட்டமைப்பு கோரிக்கை



கோவை, ஜன.

: நலிவடைந்து வரும் விசைத்தறி தொழிலை மீட்டெடுக்க, வரும் ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் சோலார் மின் தகடு கள் அமைக்க 50 சதவீத மானியம் வழங்க வேண்டும் என கோவை - திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலை வர் பூபதி கூறியதாவது, பிப்ரவரி 1-ஆம் தேதி ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக் கல் செய்யப்பட உள்ளது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2 லட்சத் திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் 90 சதவீதத்திற்கும் அதிக மான தறிகள் கூலிக்கு நெசவு செய்யும் முறை யிலேயே செயல்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாகவே விசைத்தறிகளுக்கு சோலார் மின் தகடுகள் (Solar Panels) பொருத்துவதற்கு ஒன்றிய அரசு மானியம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியு றுத்தி வருகிறோம். கடந்த மாதம் கூட ஒன்றிய நிதி அமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்து விரிவான கோரிக்கை மனுவை அளித்துள் ளோம். இந்திய அளவில் 25 லட்சம் விசைத்தறி களும், தமிழகத்தில் 5 லட்சம் விசைத்தறி களும் உள்ளன. குறிப்பாக மேற்கு மண்டலத் திலுள்ள 2 லட்சம் விசைத்தறிகளை நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது மின் கட் டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்க ளால் இத்தொழில் கடும் நலிவைச் சந்தித்து வருகிறது “அழிவு நிலையில் உள்ள விசைத் தறி தொழிலைப் பாதுகாக்கவும், நெசவாளர் களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும், சோலார் மின் தகடுகள் அமைக்க மத்திய அரசு குறைந்தபட்சம் 50 சதவீத மானியம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போது பயன்பாட்டில் உள்ள விசைத் தறிகள் அனைத்தும் பழைய மாடல்களாகவே உள்ளன. இவற்றை நவீனப்படுத்தவும், நாடா இல்லா தறிகளாக (Shuttleless Looms) மாற்றவும் அரசின் உதவி அவசியமாகும். தமி ழக அரசு ஏற்கனவே 3,000 தறிகளை நவீனப் படுத்த 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய் துள்ளது. மாநில அரசின் இந்த முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில், ஒன்றிய அரசும் நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே இத்தொ ழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். எனவே, இந்த பட்ஜெட்டில் விசைத் தறி தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக் கையை ஏற்று உரிய அறிவிப்புகளை வெளி யிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News