திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அரசுக்கு நடிகர் தனுஷ் நன்றி!

திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அரசுக்கு நடிகர் தனுஷ் நன்றி!



சென்னை, ஜன.

- 2016 முதல் 2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-16 கல்வியாண்டு முதல் 2021-22 கல்வியாண்டுகளுக்கான எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள், வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகளை, பிப்ரவரி 13ல் மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார். திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர்களாக விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூரியா, ஆர்யா, விக்ரம்பிரபு ஆகியோரும், சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய் பீம், கார்கி ஆகிய படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சிறந்த நடிகர் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில், “வட சென்னை படத்திற்காக மாநில விருதை எனக்கு வழங்கிய தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றி. இது எனக்கு உண்மையான பெருமை. விருது பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். சிறந்த படத்துக்கு முதல் பரிசாக 2 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், சிறப்பு பரிசாக 75 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கு சிறப்பு பரிசாக 1.25 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஒரு சவரன் பதக்கம் வழங்கப்பட உள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%