புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு
Feb 01 2026
19
சென்னை, ஜன.
: இந்தியாவின் பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் கடந்த மூன்றாண்டுகளில் வேலைவாய்ப்புத் தேவை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சிஐஇஎல்நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. 2022-ல் 3,500 ஆக இருந்த பணியிடங்கள் தற்போது 7,000 ஆக உயர்ந்துள்ளன. இதில் ரேடார் அமைப்புகள், விண்வெளித் தொழில் நுட்பம் மற்றும் இணைய பாதுகாப்புத் துறைகள் 60 விழுக்காடு பங்களிப்பை வழங்குகின்றன. தொழில்நுட்ப நிபுணர்களுக்கான ஊதியம் 30% வரை உயர்ந்துள்ளதோடு, போர் முறைகள் நவீனமாகி வருவ தால் உயர்திறன் கொண்ட நிபுணர்களுக்குத் தேவை அதிகரித் துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஆதித்ய நாராயண் மிஸ்ரா கூறுகையில், இத்துறை உலகத் தரத்தி லான வேலைவாய்ப்புகளை வழங்குவதால், வெளிநாடு களில் உள்ள இந்திய நிபுணர்கள் தாயகம் திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். கடுமையான தொழில் நுட்பத் தேர்வுகள் மற்றும் பின்னணி சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும், இத்துறை நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்வதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?