பறவை

பறவை

கவிஞர் இரா.இரவி.


மனிதன் அன்று விமானம் கண்டுபிடிக்க

மனதில் காரணமான காரணி பறவை ! ஆறு அறிவு மனிதனால் முடியாது

அஃறிணை பறவையால் பறக்க முடியும் !


சிறகுகள் உள்ள எல்லாப் பறவைகளும்

சிறகடித்துப் பறப்பதில்லை வானில் !


சிறகுகளின் பயனை உணராது உள்ளன

சிந்தையைப் பறந்திட பயன்படுத்தவில்லை !


இப்படித்தான் இன்றும் சில மனிதர்களும்

இனிய வாய்ப்பையைப் பயன்படுத்தவில்லை !


சின்னக் குருவியும் பறவை இனம்தான்

பெரிய பருந்தும் பறவை இனம்தான் !


குருவியின் இயல்பு மிக மிதமானது

பருந்தின் இயல்பு மிக முரடானது !


மனிதர்களில் குருவிகளும் உண்டு

மனிதர்களில் பருந்துகளும் உண்டு !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%