
.. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் செப்-26 மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு அவர்களின் வழிகாட்டுதலின்படி மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 1.23 கோடி மதிப்பீட்டில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு பெ. சு. தி. சரவணன் அவர்கள் 5 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தூய்மை பணி காவலர்களுக்கு தூய்மை உபகரணங்களை வழங்கினார்கள். ஒன்றிய செயலாளர் A. சிவக்குமார் நகரச் செயலாளர் சௌந்தர், மாவட்ட பிரதிநிதி முருகையன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியன் கழகத் தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?