பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசனை

பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசனை

சென்னை:

பள்​ளி, கல்​லூரி​களுக்கு அரசு பேருந்து சேவை வழங்​கு​வது தொடர்​பாக மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் ஆலோசனை செய்து வரு​கிறது.


இது தொடர்​பாக அத்துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்​னை​யில் மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் 27 பணிமனை​களில் இருந்து நாள்​தோறும் 3,233 பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. பள்​ளி, கல்​லூரி மற்​றும் அலு​வலக நேரங்களில் மாநகர பேருந்துகளில்கால் ஊன்ற இடம் இல்​லாத அளவுக்கு கடுமை​யான நெரிசல் காணப்​படும்.


இவற்றை கருத்​தில் கொண்டு பெண் பயணி​கள் அதி​க​மாக பயணிக்​கும் வழித்​தடங்​களில் மகளிர் மட்​டும் பயணிக்​கும் வகை​யில் 50 சிறப்பு பேருந்​துகளை இயக்​கலாம் என்று ஆலோசித்து வரு​கிறோம்.


இதேபோல், மாணவ-​மாணவி​கள் பேருந்​துகளில் இருக்​கை​யில் அமர்ந்​த​படி பயணிப்​பதை உறுதி செய்​வதற்​காக அவர்​களுக்கு என தனி​யாக 50 (நடைகள்) சிறப்பு பேருந்துகளை இயக்​க​வும் திட்​ட​மிட்​டுள்ளோம்.


அதாவது, பள்​ளி, கல்​லூரி நேரங்​களில் குறிப்​பாக காலை மற்​றும் மாலை​யில் கல்வி நிறுவன வளாகங்​களுக்​குள் நேரடி​யாக சென்று பேருந்து சேவை​கள் அளிக்​கும் வகை​யில் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அதி​லும் குறிப்​பாக மாலை​யில் கல்வி நிறுவன வளாகங்​களில் இருந்து பேருந்து சேவை​களை தொடங்​கு​வதற்​கும் உத்​தேசிக்​கப்​பட்​டுள்​ளது.


இதற்​காக சுமார் 25 கல்வி நிறு​வனங்​களை சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் தேர்வு செய்​துள்​ளது. இதில் சுமார் 4 கல்​லூரி​கள் அடங்​கு​வதோடு பெரும்​பாலான பள்​ளி​கள் பெண்​கள் மட்​டும் பயிலும் மேல்​நிலைப்​ பள்​ளி​களாகும். இந்த மகளிர் சிறப்பு பேருந்​துகள் இயக்​கு​வது குறித்​தும், பள்ளி மாணவ-​மாணவி​களுக்​கான சிறப்பு பேருந்து சேவை குறித்​தும் தமிழக அரசுக்கு பரிந்துரைகளை அனுப்​பி​யுள்​ளோம். இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%