பழைய ராமேசுவரம்

பழைய ராமேசுவரம்


*🌿 குடும்ப தோஷங்களை போக்கும் அரிய சிவஸ்தலம் 🌿*


*திருநெல்வேலிக்கு அருகிலுள்ள அருகன்குளம் என்னும் சிற்றூரில், பல தலைமுறைகளாக தொடரும் குடும்ப தோஷம், பித்ரு தோஷம், சந்ததி தடைகள் இவற்றிற்கு நிவாரணம் தரும் ஒரு அரிய சிவஸ்தலம் உள்ளது.*


*அதுவே “பழைய ராமேசுவரம்” எனப் பக்தர்களால் போற்றப்படும் ராமலிங்க சுவாமி திருக்கோவில்.*


*✨ தலத்தின் சிறப்பு*


*திருநெல்வேலி சந்திப்பு அருகே, சுமார் 5 கி.மீ் தொலைவில் அமைந்துள்ள அருகன்குளம் கிராமம், பண்டைய காலத்தில் புனித பூமியாகக் கருதப்பட்டது.*


*இங்குள்ள சிவலிங்கம், திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமபிரான் தாமிரபரணி கரையில் பிரதிஷ்டை செய்ததாக தல புராணங்கள் கூறுகின்றன.*


*அதனால் தான் இந்த தலம் “பழைய ராமேசுவரம்” என்று அழைக்கப்படுகிறது.*


*📖 ஜடாயு தீர்த்த வரலாறு.*


*சீதையை ராவணன் கடத்திச் செல்லும்போது, அதைத் தடுக்க முயன்ற வீரப் பறவையான ஜடாயு, ராவணனுடன் கடும் போரில் ஈடுபட்டான்.*


*அந்தப் போரில் காயமடைந்த ஜடாயு, அருகன்குளம் வனப்பகுதியில் வீழ்ந்து கிடந்தான்.*


*அப்போது அங்கு வந்த ஸ்ரீ ராமரும் லட்சுமணரும், ஜடாயுவை பரிவுடன் பார்த்து அவனுக்கு ஆறுதல் அளித்தனர்.*


*இறப்பிற்கு முன், “என் இறுதிச்சடங்குகளை நீங்களே செய்து தர வேண்டும்” என்று ஜடாயு வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.*


*அதன்படி தாமிரபரணி நதிக்கரையில் ராமபிரான் தர்ப்பணம், தீர்த்தம், மரியாதைகள் செய்து ஜடாயுவுக்கு பூரண விரதோசனம் அளித்தார்.*


*இந்தப் புனித இடமே இன்று “ஜடாயுத்துறை” என்று அழைக்கப்படுகிறது.*


*🕉️ ராமலிங்க சுவாமி கோவிலின் மகிமை*


*இங்கு ஸ்ரீ ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் “ராமலிங்க சுவாமி” என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.*


*கோவில் வளாகத்தில் :*


*• ராமலிங்க சுவாமி*

*• பிண்ட ராமர்*

*• ஜடாயு*

*• பர்வதவர்த்தினி அம்மை*

*• விநாயகர்*

*• முருகன்*

*• தட்சிணாமூர்த்தி*


*என பல சன்னதிகள் அமைந்துள்ளன.*


*பிற்காலத்தில் வல்லபாண்டிய மன்னர்களால் இக்கோவில் புனரமைக்கப்பட்டதாகவும், பூஜை முறைகள் இன்றளவும் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.*


*💧 தீர்த்தங்களின் தெய்வீக தன்மை*


*இத்தலத்தில் மிக முக்கியமான மூன்று தீர்த்தங்கள் உள்ளன :*


*• ஜடாயு தீர்த்தம்*

*• ராம தீர்த்தம்*

*• சிவ தீர்த்தம்*


*இந்த தீர்த்தங்கள் தாமிரபரணி நதியில் கலக்கும் இடத்தில் ஸ்நானம் செய்து வழிபட்டால்,*


*👉 27 தலைமுறை தோஷங்கள்*

*👉 பித்ரு தோஷம்*

*👉 வம்ச தடைகள்*


*நீங்கும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.*


*🌿 குடும்ப தோஷ நிவாரண பரிகாரம்*


*இக்கோவிலில் உள்ள பழமையான கல் விளக்கில்,*


*👉 இலுப்பை எண்ணெய்*

*👉 நல்லெண்ணெய்*


*இரண்டையும் கலந்து தீபம் ஏற்றி வழிபடுவது,*


*• குடும்ப சாந்தி*

*• உறவுகளில் ஒற்றுமை*

*• வாழ்க்கை முன்னேற்றம்*


*இவற்றை அளிக்கும் என்று பெருமையுடன் கூறப்படுகிறது.*


*🧒 குழந்தை பாக்கியம் வேண்டுவோர்*


*ராமலிங்க சுவாமி மற்றும் பிண்ட ராமர் இவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால்,*


*👉 குழந்தை பாக்கியம்*

*👉 சந்ததி விருத்தி*


*கிடைக்கும் என்பது பல பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.*


*🕰️ கோவில் நேரம்*


*🕉️ காலை: 8.00 – 10.00*

*🕉️ மாலை: 5.00 – 6.30*


*🚩 செல்லும் வழிகள்*


*📍 திருநெல்வேலி சந்திப்பு – 5 கி.மீ*

*📍 தாழையூத்து – 3 கி.மீ*


*• மினிபஸ் வசதி உள்ளது*

*• ஆட்டோ மூலம் செல்லலாம்*

*• சென்னை – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது.*


*🔔 சிறப்பு நாட்கள்.*


*• ஆடி அமாவாசை*

*• தை அமாவாசை*

*• புரட்டாசி மகாளய அமாவாசை*


*இந்த நாட்களில் ஜடாயுத்துறையிலதர்ப்பணம் செய்து, ராமலிங்க சுவாமி & பிண்ட ராமர் வழிபாடு செய்தால் மிகுந்த புண்ணியம் என நம்பப்படுகிறது.*


*🪔 இறுதிக் குறிப்பு*


*பழைய ராமேசுவரம் ஒரு சாதாரண சிவாலயம் அல்ல.*


*👉 இது ஒரு தலைமுறை அல்ல*

*👉 பல தலைமுறைகளுக்கான*

*👉 பாவ நிவாரண ஸ்தலம்.*


*குடும்ப சாந்தி, பித்ரு தோஷ நிவாரணம், வாழ்க்கை முன்னேற்றம் வேண்டுபவர்கள் இந்த தலத்தை தவறாமல் தரிசிக்க வேண்டிய ஒரு அரிய புனித ஸ்தலம்.*


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%