வில்வ இலை பொடி தினமும் 1ஸ்பூன் சாப்பிட்டு வர ஆஸ்துமா நோய் குணமாகும்.
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி குணமாகும்.
மாதுளம் பழம் சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.
கடுக்காய் தோலை சுட்டு ஒரு துண்டை வாயில் அடக்கினால் வறட்டு இருமல் குணமாகும்.
வேப்பம் பூவை வறுத்து பொடித்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.
காய்ச்சிய பசும்பால் சிறிதளவு மிளகுத்
தூளைப் போட்டு கலந்து குடித்தால் இருமல் நிற்கும்.
மாங்கொ ட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலுடன் கலந்து சாப்பிட பேதி நிற்கும்.
பிரமதண்டு இல்லையை சுட்ட சாம்பலால் பல் தேய்த்து வர பல் சொத்தை நீங்கும்.ñ
துத்தி இலை வேர் கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல் கூச்சம், பல் ஆட்டம் தீரும்.
கோவைப்பழம் சாப்பிட பல் வலி குணமாகும்.
ஆலம்பாலை பற்கள் மீது தடவினால் பற்கள் கெ ட்டிப்படும்.
மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.
சுரைக்காய் வாரம் 2 தடவை சாப்பிட்டு வர தொப்பை குறையும்.
மாதுளம் பழம் சாப்பிட குடல் புழுக்கள் அழியும்.
மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க வயிற்று கடுப்பு குணமாகும்.
வெற்றிலையும் மிளகும் சேர்த்து அரைத்து 2கிராம் உட்கொள்ள விஷங்களும் முறியும்.
வில்வ மரத்தின் பூவுடன் புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட குடல் வலிமை பெரும்.
தினமும் ஒரு டம்ளர்
திராட்சை பழச்சாறு குடித்து வர அல்சர் குணமாகும்.
தொகுப்பு
M. ராதாகிருஷ்ணன்,
வாணியம்பாடி -635751
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?