பாவாணா் பிறந்த நாள் விழா

பாவாணா் பிறந்த நாள் விழா



   இளமனூர் அரசு மேனிலைப் பள்ளியில் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் 124 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் கனகலட்சுமி தலைமை வகிக்க, ஆசிரியை தேவி முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் மகேந்திர பாபு வரவேற்றார். தமிழாசிரியர் நாகேந்திரன், சமூக அறிவியல் ஆசிரியர் இராணி வாழ்த்திப் பேசினார்கள். சிறப்பு விருந்தினராக உலகத் தமிழ் கழக மதுரை மாவட்ட அமைப்பாளரும், பாவாணரின் கொள்ளுப்பெயரனுமான சீவாப்பாவாணர் கலந்து கொண்டு, பாவாணரின் தமிழாராய்ச்சிப் பற்றிப் பேசினார். பாவாணர் அவர்கள் ஐம்பது ஆண்டுகளாக வேர்ச்சொல்லாராய்ச்சித் துறையில் 52 நூல்கள் எழுதியுள்ளார். அதில் தமிழ் மொழியின் வரலாறு குறித்தும், தமிழர் வரலாறு குறித்தும், உலகின் முதல் மனிதன் தமிழன், அவன் தோன்றியது குமரிக் கண்டம் எனவும் நிறுவியவர் பாவாணர் அவர்கள். அவரது ஆய்வுகள் இன்று போற்றப்படுகிறது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவரது ஆய்விற்கு உரிய மதிப்பு தரப்படவில்லை. ஆயினும் பாவாணர் மொழிக்கான தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்தார். தமிழ்ச்சொல் வளம் குறித்து அவரது ஆய்வு இன்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய மாணவர்கள் பாவாணரின் நூல்களைப் படித்து நம் மொழியின் பெருமையை, சிறப்பை உணர வேண்டும். பாவாணரின் ஆய்வைப் பின்பற்றி இன்று பலரும் மொழியாராய்ச்சி செய்து வருகிறார்கள் என்றார். உடற்கல்வி ஆசிரியர் முத்துராசா நிகழ்வை ஏற்பாடு செய்தார். ஒன்பதாம் வகுப்பு மாணவி சக்திபிரியா நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%