எத்தனை முறை
பிளாக் செய்து
அன் பிளாக் செய்தாலும்
திரும்ப பிளாக் செய்து
திரும்ப,திரும்ப அன் பிளாக் செய்தாலும்
கோபத்தில் டெலிட் செய்தாலும்
மறக்காமல் நினைவில் நிற்பது
உன் அலைப்பேசி எண் தானடி
சட்டென கேட்டால்
என் பிறந்தநாளே குழப்பத்தோடு தான் சொல்வேன்
உன்னை பற்றி கனவில் கூட
சரியாக தான் சொல்கிறேன்
என்னை விட
உன்னையே அதிகம் தெரிந்து வைத்திருக்கிறேன்
என்னை நானே வெறுக்கும் படி
செய்தவளும் நீ தான்
என்னை விட உன்னை அதிகம்
என்னை நேசிக்கும் படி செய்தவளும் நீ தான்
திட்டி தீர்த்தாலும்
கொட்டி விடுகிறேன்
கோடான கோடி அன்பை
உந்தன் காலடியில்!
-லி.நௌஷாத் கான்-
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%