புதுவைத் தமிழ்ச் சங்க தலைவர் முனைவர் வி.முத்து தலைமையில் தாரகைக்குறள் நூல் வெளியீடு*
Sep 22 2025
27

வந்தவாசி, செப் 23:
தாரகைத் தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழா புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் புதுவை தமிழ்ச் சங்கத் செயலாளர் கவிச்செம்மல் சீனு.மோகன்தாஸ் வரவேற்புரை ஆற்றினார். பண்ருட்டி தமிழ்த்தாரகை சுகந்தீனா அவர்கள் எழுதிய 'தாரகைக்குறள்' எனும் நூலினை நல்லாண் பிள்ளை பெற்றாள் ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தர் வெளியிட, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் எஸ்.ஆறுமுகம் பெற்றுக் கொண்டார். உடன் ஸ்ரீ விஜயகுமார் சுவாமிகள், கடலூர் தமிழ்ச்சங்க தலைவர் பேராசிரியர் ராசா.குழந்தை வேலனார், திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் கவிதா செந்தில்நாதன், ஸ்ரீ ராமச்சந்திரா அறக்கட்டளை நிறுவனர் டி.ஆர். முரளி, நூலாசிரியர் தமிழ்த்தாரகை சுகந்தீனா, மயிலம் எஸ்.எஸ்.மனோகர், வெற்றிப்பேரொளி, நெய்வேலி பாலாஜி பாடலாசிரியர் கவி குமரன், பேட்டை பொன்முடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?