பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது
Jan 31 2026
21
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா நாபோக்லு அருகே உள்ள செரியபரம்பு கிராமத்தை சேர்ந்தவர் முகமது சவாத். இவர் பெங்களூரு சம்பிகேஹள்ளியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்களுடன் தனிமையில் உல்லாசமாக இருப்பதை முகமது சவாத் வீடியோவாக எடுத்துள்ளார்.
அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலர் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த வீடியோவில் உள்ள கல்லூரி மாணவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து பதிவிட்டனர். இந்நிலையில், குடகு மேம்பாட்டு குழு தலைவர் பிரசன்னா பட், மடிகேரி புறநகர் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.
அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டது தொடர்பாக கல்லூரி மாணவர் முகமது சவாத்தை போலீசார் கைது செய்துள்ளனர். அவரின் செல்போனை கைப்பற்றி ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---------
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?