news Breaking News
clock

பெற்றோர்களே!

பெற்றோர்களே!


----------------------------------

புதர்களில் முளைத்திட்ட

தப்புச்செடிகளாய்ப்

புதல்வர்களைப்

பாவிக்கிறார்கள்

பெற்றோர்கள் சிலர்!


இவர்கள் இயந்திரச்

சிறகுகளைக்

கட்டிக்கொண்டு

அலுவலகச்சிறைக்குச்

சென்று விடுவதால்

அரவணைப்பு இன்றித்

தவிக்கிறார்கள் பிள்ளைகள்!


பெற்றோர்

அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம் சிலர் சிகரங்களில் ஏற்றுகிறார்கள் !

சிலர் சிலுவை சுமக்கச்

செய்கிறார்கள்!


சூரியனிடமிருந்தே

நட்சத்திரங்கள்

ஒளியைப்பெறுவதைப்

போல் பெற்றோர்களின்

நடத்தைகளே

பிள்ளைகளை

ஈர்க்கின்றன!


பிள்ளைகளின்

இந்திய வாழ்வில்

தனக்கென ஒரு

இலட்சிய சீலரை

முன்மாதிரியாகக்

கொள்ளும் வரை 

நாம் தான் முன்மாதிரி!


கல்விப்பூங்காவில்

பெண்பிள்ளைகளின்

அறிவு அரும்பு விடும் போதே அவற்றை

அறுவடை செய்து

திருமணப்பூந்தொட்டியில் நட்டு வைக்கிறார்கள்!


சொன்னதைச்சொல்லும் கிளிப்பிள்ளைகள்தான்

பிள்ளைகள் அவர்களைக் கூண்டுக்குள் அடைத்து

வைத்து ஜோசியம்

பார்க்காதீர்கள்!

சிந்தனைச்சிறகுகளைக் கொடுங்கள் அவர்கள் சுதந்திரவானில் பறக்கட்டும்!


தீயபழக்க வழக்கங்கள்

கிருமிகளைப்போல் பரவும் நிக்கோடினையும் 

மதுவையும் நீங்கள்

கைக்கொண்டால்

பிள்ளைகள் வாழ்க்கை

திசைமாறிப்போகும்!


கிடைப்பதற்கரிய

சந்தானபாக்கியம்

பெற்றவர்களே!

பிள்ளைகள் வாழ்வைச்

சந்தனம் போல்

மணக்கச்செய்யுங்கள்!


கவிஞர் த.அனந்தராமன்

      துறையூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News