news Breaking News
clock

எல்லாம் அவளே

எல்லாம் அவளே



  " அவள் முகமே

     கண்ணாடி அவளுக்கு

     எதற்கு மூக்கு

     கண்ணாடி ..."


     அவளே எழுதுகோல்

     அவளே திறவுகோல்

     அவளே ஊன்றுகோல்

     அவளே தூண்டுகோல்

     அவளே செங்கோல் ...."


      அவளே கவிதை

      விழியும் அவள்

      இதழும் எதுகை

      மோனை அவள்

      மௌனமும்

      உடல் ஜாலமும்

      சொல்லுமே

      அலுக்காத கவிதை ..."


      அ என்றால் அவள்

      ஆ என்றால் ஆசை

      இ என்றால் இசை

      ஈ என்றால் ஈர்ப்பு

      உ என்றால் உரிமை

      ஊ என்றால் ஊக்கம்

      எ என்றால் எழுச்சி

      ஏ என்றால் ஏற்றம்

      ஐ என்றால் அவள் ஐ

      ஒ என்றால் ஒற்றுமை

      ஓ என்றால் ஓவியம்


       அவளே உயிர் எழுத்து

       மெய் எழுத்து 

       அவளே தாலாட்டு

      அவளே தாய்மொழி

       அவளே தமிழ்மொழி..."

    

        அவளே வழிகாட்டி

        முதல் ஆசான்

        முன்னோடி முதுகெலும்பு

        அச்சாணி ....."


        அவளன்றி ஓர்

        அணுவும் அசையாது

        அவளுக்கு இணை

        எங்கும் எதிலும்

        கிடையாது .... "


        அம்மா தாய்

        அன்னை அகிலமும்

        அவளே அவள்

        கண்ணுக்குள்ளே

        காந்தம் உண்டு

        கேளம்மா ..."


    - சீர்காழி. ஆர். சீதாராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News