மகிழ்ச்சியும், வருத்தமும் தரும் மத்திய பட்ஜெட்: ஏ.எம். விக்கிரமராஜா கருத்து
Feb 03 2026
12
சென்னை, பிப்.
மத்திய பட்ஜெட் மகிழ்ச்சியும், வருத்தமும் தரும் பட்ஜெட் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நிர்மலா சீதாராமன் 9 ஆண்டுகள் தொடர் பட்ஜெட் சமர்ப்பணத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒரு தமிழராக வரவேற்கிறோம் என்று பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டுக்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், அரசு வருவாய் அதிகரிப்புக்கான சாத்திய கூறுகளையும் பேரமைப்பு சார்பில் நிதியமைச்சகத்திற்கு முன்னரே சமர்ப்பித்திருந்தோம். அவ்வாலோசனைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதும் வருத்தத்திற்குரியது.
மேலும், தொழில் வணிகர்களுக்கான வணிகர்களின் நலன் காக்கின்ற எந்த ஒரு செய்தியும் பட்ஜெட்டில் இடம் பெறாதது. மேலும் வருத்தம் அளிக்கிறது. பற்றாக்குறை பட்ஜெட்டாக இருப்பதும், எதிர்காலம் காலங்களில் வரி செலுத்துவதற்கான வரிச்சுமை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சமும் தென்படுகின்றது.
அரிதான கனிம வழித்தடங்கள் மேம்படுத்த முனைந்திருது வரவேற்புக்குரியது. மெட்ரே சிட்டிகளை இணைத்து அதிவேக ரெயில்கள் இயக்கத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் நல்ல முயற்சியே.
வணிகர்களின் தொடர் கோரிக்கைகளான அரசு ஊழியர்களுக்கு இணையான அதிகாரம் பகிர்வின் மூலம் அரசின் பயன்கள் வணிகர்களுக்கு அளிக்கப்பட வேண்டியது மாநிலத்தின் கட்டாயம் என்பதை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும். வரியை வசூலிக்கின்ற பணியையும், அரசு கருவூலத்திற்கான வரியை தாங்களே செலுத்துகின்ற இருவழி பாதையாக இருக்கின்ற வணிகர்களை பாதுகாக்கின்ற பட்ஜெட்டாக இல்லை என்பது பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயமும், கடமையுமாகும்.
ஒட்டுமொத்தமாக பட்ஜெட் மகிழ்வும் – -வருத்தமும் கலந்த ஒரு பட்ஜெட் என்பது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கருத்து என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?