" நம் அடிப்படை
தேவையும் ஆதாரமும்
விளையாட்டுப் பொருளாகி
தரம் இல்லாமல்
நம்மை வந்து
சேரும் ..."
ஓட்டுக்கு காசும்
தேர்தல் சமயத்தில்
செய்யும் செலவும்
அரசியல்வாதிகளின்
தந்திரக்கார
வித்தை ..."
தூண்டில் மீன்
வாக்காளர்கள்
ஒரு நாள்
நன்கொடையில்
நாவையும்
வயிற்றையும்...."
நிரப்பி விட்டு
ஐந்து வருடம்
துயர்படும் படித்த
படிக்காத
கைநாட்டுக்கள் ....."
தேன் கலந்த
பேச்சும் வாரி வாரி
விடும் வாக்குறுதியும்
அரிச்சந்திரன் வீட்டு
வாரிசு போலவும் ..."
ஆடும் நாடகம்
ஏற்கும் கதாபாத்திரம்
ஏழையின் மனதை
கரைத்து விடுகிறது .... "
உணவு உடை
உறைவிடம் கல்வி
நோய் தீர்க்க
நல்ல மருந்து
மருத்துவமனை
பயணிக்க சாலை
குடிக்க நல்ல நீர் ....."
இதைக் கூட
கேட்டுத்தான் பெற
வேண்டிய அவல
நிலை ஜனநாயகம்
பண நாயகத்தின்
பிடியில் நசுங்கி
கசிகிறது உதிரம் ...."
- சீர்காழி. ஆர். சீதாராமன்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?