*என் மானம் காத்தப் பூமி*

*என் மானம் காத்தப் பூமி*



அரசமரத்து உச்சியிலிருந்து

குளத்தில் குதித்து~நீரில்

நீந்தி விளையாடியது,


பாலத்து மதகிலேறி

ஆற்றில் கரணமடித்து

அப்பாவிடம் அடி வாங்கியது,


வீதியில் குழித்தோண்டி

கிட்டிப்பில் விளையாடி

பக்கத்து வீட்டு

பாட்டி மண்டையை உடைத்தது,


சிந்துகின்ற கதிர்சேர்த்து

பாய்வீட்டு கடையில்கொடுத்து

பால்பன் சுவைத்தது,


வடிக்கால் ஓடையில் அமர்ந்து

சின்னமீனை தூண்டியில்கோர்த்து

பெரிய மீனை பிடிக்கும்

அறிவாளிதனம்,


இதையெல்லாம்

என் மகனிடம் சொன்னால்

வாப்பா, போகலாம்

நம்ம ஊருக்கு என்கிறான்,


அவனை,அங்கே கூட்டிச்சென்று

எதை,எப்படி,

கற்றுத்தருவது?!

எங்கள் மானம்காத்த பூமியெல்லாம்

வானம் பார்த்த பூமியாய்

வரண்டு கிடக்கும்போது?

நான் அனுபவித்த சுகமெல்லாம்

என் மகனுக்கு

கதையாகிப்போனது

இம் போடுவதற்கு,,,,




~ நாகை ஆசைத்தம்பி

   கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%