காதலெனும் போதினிலே-கண்மறைக்கும் சாதியெது கருணை காட்டும் பெண்ணே உன் கருத்தை தெளிவாக்கிடு
உயர்ந்த வீட்டு பெண்ணே - நீ உறவு கொள்ளல் வேணும் காதல் மலர்ந்த வாழ்வு நிலைபெற - என்னை மணமுடிக்க வேணும்
பேதமது மறைந்திடவே - தினம் பேசி பழக வேணும் செல்வமே உன் பேச்செல்லாம் - சாதி பிணியை போக்க வேணும்
சாதி பேதம் துறந்து - நாமே சங்கமமாக வேணும் நீதி நிலைத்து மலர - நம் நினைப்பும் ஒன்று படனும்
எங்க வீட்டு பெண்ணும் எழில் அழகு மின்னும் உங்க வீட்டு இளைஞருக்கும் ஏற்ற பொருத்தமாகும்
வீணர் வகுத்த சாதியை விட்டெறிந்தே வரனும் விருப்பம் உள்ளதென்றால் - என் வீடு தேடி வரனும்
எவர் எதிர்த்த போதும் நாம் இணைந்து நிற்க வேணும் இல்லறத்து வாழ்வில் - குழந்தை சாதி இன்றி வேண்டும்.

எஸ். சந்திரசேகரன் அமுதா தங்கிக்கோட்டை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?