மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக ரூ.12 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக ரூ.12 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு


 

சென்னை: மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசு ரூ.12 கோடி நிதி அறி​வித்​து, உடனடி​யாக பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.


நேற்று (பிப்​.1) வெளி​யான ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 7-ம் பக்​கத்​தில் ‘மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்​டிடம் மூடல் -நோயாளி​களை செங்​கல்​பட்​டுக்கு அனுப்​பும் அவலம்’ என்ற தலைப்​பில் செய்தி வெளி​யானது.


‘செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகத்​தில் உள்ள அரசு வட்​டார தலைமை மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை வசதி இல்​லாத​தால், நோயாளி​களை 30 கி.மீ. தொலை​வில் உள்ள செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்துவமனைக்கு அனுப்​பும் நிலை உள்​ளது.


55 ஆண்​டு​கள் பழமை​யான கட்​டிடத்​தில் அறுவை சிகிச்சை அரங்​கம் செயல்​பட்டு வந்​தது. கட்​டிடத்​தின் அஸ்​தி​வாரம் பலவீனமடைந்​துள்​ள​தால், கட்​டிடம் மூடப்​பட்​டுள்​ளது. இதனால், அறுவை சிகிச்சை நிறுத்​தப்​பட்​டுள்​ளது. அறுவை சிகிச்சை தேவைப்​படும் நோயாளி​கள் செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்துவமனைக்கு பரிந்​துரைக்​கப்​படும் நிலை உள்​ளது.


புதிய கட்​டிடம் அமைக்க நிதி ஒதுக்​கி, விரை​வாக கட்​டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்’ என்று அந்த செய்​தி​யில் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதுகுறித்து தமிழக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: ‘மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிக்சை கட்​டிடம் மூடல்’ என்ற செய்தி பிப்​.1-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளிவந்​துள்​ளது.


இதை பார்த்​தவுடன், தமிழக முதல்​வர் ஸ்​டா​லின் என்​னிடம் கேட்​டறிந்​து, உடனடி​யாக தீர்வு காண உத்​தர​விட்​டார். நானும், சுகா​தா​ரத் துறை செயலர் ப.செந்​தில்​கு​மாரும் இதுகுறித்து விசா​ரித்தோம்.


இதையடுத்​து, தேசிய நலவாழ்​வுக் குழும நிதி​யில் இருந்து மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கு கட்​டிடத்​துக்கு ரூ.10 கோடி, மருத்​துவ உபகரணங்​களுக்கு ரூ.2 கோடி என மொத்​தம் ரூ.12 கோடி நிதி உடனடி​யாக அறிவிக்​கப்​பட்​டு, அதற்​கான பணி​கள் தொடங்​கப்​பட்டு இதற்கு தீர்வு காணப்​பட்​டுள்​ளது என்று அவர் தெரி​வித்​துள்​ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%