news Breaking News
clock

சிறுமியிடம் முறைகேடாக நடந்து கொண்ட 7 பேர் போக்சோ வழக்கில் கைது

சிறுமியிடம் முறைகேடாக நடந்து கொண்ட 7 பேர் போக்சோ வழக்கில் கைது



கும்பகோணம், பிப்.

17 வயது சிறுமியிடம் முறைகேடாக நடந்து கொண்ட 7 பேரை, காவல்துறை யினர் போக்சோ வழக்கில் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அப்பு (எ) எஸ். சுரேந்தர் பாண்டியன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நட்பு காத லாக மாறியுள்ளது. இதையடுத்து சுரேந்தர்பாண் டியன், அந்த சிறுமியிடம் முறைகேடாக நடந்துள்ளார். பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த சிறுமியிடம் புண்ணிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன் (20) என்பவர் கடந்த 2025 ஆம் ஆண்டு முதல் நெருங்கி பழகி வந்துள்ளார். பசுபதிகோவி லைச் சேர்ந்த சுதன் (24) என்ற ஜெயசுதனு டன் அந்த சிறுமி பழக்கம் வைத்துள்ளார். ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் அந்த சிறுமி பழகி வந்துள்ளதாகக் கூறப் படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, அவரது பெற்றோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரி வித்துள்ளனர். இதனால், பெற்றோர் அதிர்ச்சியடைந்து சிறுமியிடம் விசாரித்த போது மணிமாறன் மற்றும் ஜெயசுதன் ஆகி யோர் தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்துள்ளது. உடனே அவர்கள் சிறுமியை பாபநாசம் அனைத்து மகளிர் போலீசுக்கு அழைத்து வந்து புகார் அளிக்க செய்து உள்ளனர். அந்த சிறுமியிடம் விசாரித்த போது மணி மாறன், ஜெயசுதன் ஆகியோர் தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் சுரேந்தர்பாண்டி யன், அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த எம்.விஸ்வநாதன், ஆர்.ராக்கி என்ற ராகேஸ், ஆர்.ஆகாஷ், எம்.சண்முகம், புண்ணிய நல்லூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்ப வரின் மகன் அசோக் ஆகியோரும் தன்னி டம் தவறாக நடந்து கொண்டதாகத் தெரி வித்துள்ளார். இதையடுத்து பாபநாசம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் உஷா மற்றும் காவல்துறையினர் மணிமாறன், ஜெயசுதன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்ட னர். இதில் இருவரும் சிறுமியிடம் முறை கேடாக நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோவில் வழக்குப் பதிந்து மணிமாறன், ஜெயசுதனை கைது செய்தனர். மேலும் சுரேந்தர் பாண்டியன் உட்பட 5 பேரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News