news Breaking News
clock

பட்டுக்கோட்டை கோட்டத்தில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம்

பட்டுக்கோட்டை கோட்டத்தில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம்



தஞ்சாவூர், பிப். - பட்டுக்கோட்டை கோட்டத்தில் இரு வார கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குநர் மரு இ.விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ராணிகட் நோய் எனப்படும் வெள்ளை கழிச்சல் நோய் கோழிகளைத் தாக்கும் மிக மோசமான நோய். இது குளிர்காலத்தில் அதிகம் பரவக்கூடியது. பிறந்த, 8 வாரமான கோழிக் குஞ்சுகளுக்கு இதற்கான தடுப்பூசியை கட்டாயம் செலுத்த வேண்டும். தவறினால் நோய் பாதிக்கப்பட்ட இரண்டு நாள்களில் குஞ்சுகள் இறக்க நேரிடும். பெரிய கோழிகள் என்றால், வாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதுடன், முட்டை இடுவதிலும் பிரச்சனை ஏற்படும். இதர கோழிகளுக்கும் பரவும் என்பதால், கோழி வளர்ப்பவர்களுக்கு தேவை யற்ற பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும். பிராய்லர் கோழிகளைப் பொறுத்தவரை, பண்ணையாளர்களே அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தி பராமரித்துக் கொள்கின்ற னர். எனவே, நாட்டுக்கோழிகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தடுப்பூசி மிக அவசியம். வெள்ளை கழிச்சல் நோயால் கோழிகளுக்கு 90 சதவீதம் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதிலிருந்து கோழிகளை பாதுகாக்க சனிக்கிழமை தோறும் கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் வெள்ளை கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பட்டுக்கோட்டை கோட்டத்தில் உள்ள 27 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 2 கால்நடை கிளை நிலையம் மூலம் நடத்தப்படும் முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News