கல்லூரி மாணவர்களுக்கு நாளை கந்தர்வன் கதை சொல்லுதல் போட்டி

கல்லூரி மாணவர்களுக்கு நாளை கந்தர்வன் கதை சொல்லுதல் போட்டி



புதுக்கோட்டை, பிப். - பிப்ரவரி 7 அன்று நடைபெற உள்ள கந்தர்வன் நினைவு கலை இரவையொட்டி, கல்லூரி மாணவர்களுக்கான, கந்தர்வன் கதைகள் சொல்லுதல் போட்டி பிப்.03 (செவ்வாய்) அன்று புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதுகுறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர் பேரா.சா.விஸ்வநாதன் தெரிவிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலை-அறிவியல் கல்லூரி மாண வர்களுக்கான கந்தர்வன் நினைவு கலை இரவு, கந்தர்வன் கதைகள் சொல்லுதல் போட்டி, 3.2.2026 (செவ்வாய்) அன்று கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. முதல் கட்ட போட்டி 12 கல்லூரிகளில் நடைபெற்று, ஒவ்வொரு கல்லூரியிலும் இருவர் தெரிவு செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் 3.2.2026 அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். போட்டி யில் வெற்றி பெறுகிறவர்களுக்கு முதல் பரிசு-ரூ.5000, இரண்டாம் பரிசு-ரூ.3000, மூன்றாம் பரிசு-ரூ.2000 மற்றும் ஆறுதல் பரிசாக ஐவருக்கு தலா ரூ.1000/- வீதம் வழங்கப் படவுள்ளது. பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் பிப்ரவரி 7 அன்று புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறு கலை இரவில் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்படும்” என்றார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%