காவலர் வீட்டில் 35 பவுன் நகை திருட்டு: ஜார்க்கண்ட் மாநில பெண் கைது

காவலர் வீட்டில் 35 பவுன் நகை திருட்டு: ஜார்க்கண்ட் மாநில பெண் கைது



புதுக்கோட்டை, பிப்.- காவலர் வீட்டில் 35 பவுன் தங்க நகை களைத் திருடிச் சென்ற ஜார்க்கண்ட் மாநிலத் தைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை கம்பன் நகரைச் சேர்ந்த வர் கலைராஜன், பழைய பேருந்து நிலையப் பகுதியில் கணினி நிறுவனம் நடத்தி வரு கிறார். இவரது மனைவி அபர்ணா, திருமயம் காவல் நிலையத்தில் தலைமைக் காவல ராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை இவர்கள் இருவ ரும் பணிக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் கலைராஜனின் தாய் தமிழ்ச்செல்வி மட்டும் இருந்துள்ளார். வீட்டின் பின்புறம் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவர், வீட்டுக் குள் ஏதோ சப்தம் கேட்டதையடுத்து வந்து பார்த்த போது, பீரோ திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவுக்குள் வைக்கப்பட்டிருந்த 35 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தன. இதுகுறித்து தகவல் தெரிவித்ததை அடுத்து மகன் கலைராஜன், மருமகள் அபர்ணா ஆகி யோர் வந்து பார்த்துவிட்டு, நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து நகரக் காவல் துணைக் கண்கா ணிப்பாளர் இரா. பிருந்தா வழிகாட்டுதலில், நகரக் காவல் ஆய்வாளர் சுகுமார் தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. வீட்டின் பீரோவில் இருந்த கைரேகை களைப் பதிவு செய்து ஆய்வு செய்ததில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கீரன்ஜானி (28) என்ற பழைய குற்றவாளியின் கைரேகை யுடன் ஒத்துப்போனது. ஏற்கனவே இவர் மீது சேலம் பகுதியில் நடைபெற்ற திருட்டுச் சம் பவங்களில் தொடர்பு இருந்ததால், காவல் துறையினரின் பதிவேடுகளில் இருந்து இவர் அடையாளம் காணப்பட்டார். இதைத் தொ டர்ந்து வேலூரில் தங்கியிருந்த கீரன்ஜானியை தனிப்படை போலீசார் சனிக்கிழமை கைது செய்து புதுக்கோட்டை அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து 35 பவுன் தங்க நகை கள், 100 கிராம் வெள்ளி, ரூ.50 ஆயிரம் ரொக்க மும் பறி்முதல் செய்யப்பட்டது. பின்னர் குற்ற வியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%