பிப்.12 பொது வேலைநிறுத்தத்தை விளக்கி திருவாரூரில் பிரச்சாரம் நடத்த முடிவு

பிப்.12 பொது வேலைநிறுத்தத்தை விளக்கி திருவாரூரில் பிரச்சாரம் நடத்த முடிவு



திருவாரூர், பிப். - மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக பிப்ரவரி 12 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதையொட்டி திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே.குணசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் எஸ்கேஎம் மாவட்ட நிர்வாகிகள் எம்.சேகர், பி.கந்தசாமி, ஜி.பவுன்ராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.கே.என்.அனிபா, மாவட்ட துணைத் தலைவர் டி.வீரபாண்டியன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.மாலதி, ஏஐடியுசி மாவட்ட நிர்வாகிகள் புலிகேசி, தியாகராஜன், தொமுச மா.தமிழரன், இரா.ராஜாஜி, ஐஎன்டியுசி மாலதி, ராஜிவ்காந்தி மற்றும் அனைத்து அமைப்பின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பிப்.12 அன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி என மூன்று மையங்களில் மறியல் நடைபெறும். பிப்.8 அன்று திருவாரூரிலும், பிப்.9 அன்று திருத்துறைப்பூண்டி மற்றும் பிப்.10 அன்று மன்னார்குடியில் போராட்டத்தை விளக்கி பிரச்சாரம் நடத்துவது. திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து பேரணியாக சென்று தலைமை தபால் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%