சென்னை-, பிப்
சென்னை–-பெங்களூரு உள்பட 7 அதிவேக ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே துறையின் மூலனதச் செலவுகளுக்காக மத்திய பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.2,77,380 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே துறையின் மூலனதச் செலவுகளுக்காக மத்திய பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.2,77,380 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய ரெயில் வழித்தடங்கள் அமைத்தல், ரெயில் என்ஜின், பெட்டிகள் கொள்முதல், உற்பத்தி உள்ளிட்டவை அடங்கும்.
கடந்த ஆண்டு ரெயில்வேக்கு ரூ.2,52,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை 10.25 சதவீதம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பட்ஜெட் ஆவணங்களில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ரெயில்வே துறை மொத்தம் ரூ.3,85,733.33 கோடி வருவாய் ஈட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதில் செலவு ரூ.3,82,186.01 கோடி என்றும், நிதியாண்டின் இறுதியில் உபரித் தொகை ரூ.3,547.32 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ரெயில்வே துறைக்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. ரூ.2,77,380 கோடியில் ரயில்வே தண்டவாளங்கள் அமைக்க ரூ.36,721.55 கோடி, தண்டவாளத்தை அகலப்படுத்தும் பணிகளுக்கு ரூ.4,600 கோடி, இரண்டாவது வழித் தடம் அமைக்க ரூ.37,750 கோடி, என்ஜின், பெட்டிகள் கொள்முதல், உற்பத்திக்கு ரூ.7,500 கோடி, சிக்னல் அமைப்பு, ரெயில்வே தொலைத்தொடர்பு, கவச் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்டவற்றுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை-பெங்களூரு, சென்னை-ஹைதராபாத், புணே-ஹைதராபாத், பெங்களூரு - ஹைதராபாத், பெங்களூரு - வாரணாசி, வாரணாசி - சிலிகுரி இடையே அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கும் அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இது தொடர்பாக ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘ரெயில்வே துறைக்கான அறிவிப்புகளுக்காக பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 7 அதிவேக வழித்தடங்கள் மட்டுமல்லாது, சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. வளர்ந்த பாரதம் என்ற இலக்கை எட்ட ரெயில்வே துறை தொடர்ந்து சிறப்பாக பங்களிக்கும்’ என்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?