news Breaking News
clock

மனம் நம் கை வசம்

மனம் நம் கை வசம்



கீதா சேரவிருந்த அந்த வேலைக்கு வீட்டில் கடும் எதிர்ப்பு.


“பெண்கள் ஹாஸ்டலா? அதுவும் வார்டன் வேலையா?” அப்பாவின் குரலில் அச்சம். அம்மாவின் கண்களில் சந்தேகம்.


“அங்க யாரெல்லாம் இருப்பாங்க தெரியுமா கீதா?...வாழ்க்கையில் தோற்றவங்க… டைவர்ஸ் ஆனவங்க… கணவனை இழந்த விதவைகள்… அடித்து துரத்தப்பட்ட பெண்கள்… இப்படித்தான் இருப்பாங்க!..

நீ அவங்க கூடப் பழகி...அவங்க கதையைக் கேட்டுக்கிட்டே இருந்தா… கல்யாணமே வேண்டாம்!ன்னு உன் மனசு மாறிடும்.” இது அம்மா.


“இந்த வேலை நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது.” இது அப்பா.


கீதா அமைதியாகவே இருந்தாள்.

எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை.


அடுத்த வாரமே அந்த வேலையில் சேர்ந்தாள்.


அங்கே அவள் கண்ட.. கேட்ட வாழ்க்கைக் கதைகள் எல்லாமே 

கசப்பானவை… ஆனால் கெட்டவையல்ல.


ஒருத்தி, கணவனால் கை விடப் பட்டவள்.


இன்னொருத்தி இளம் விதவை.

“மறுமணம் வேண்டாம்” என்ற அவள் முடிவின் பின்னால் பயம் இருந்தது. விருப்பமும் இருந்தது.


விவாகரத்து பெற்ற இரண்டு பெண்களின் கணவர்களை

அழைத்துப் பேசினாள். இருவருக்குள்ளிருந்த தடைகளை அப்புறப்படுத்தினாள். இருவருக்கும் கவுன்சிலிங் செய்தாள். சில மாதங்களில் அவர்கள் மீண்டும் கைபிடித்தார்கள்.



அதே ஹாஸ்டலில் மறுமணத்தை மறுத்த இரண்டு விதவைகள்

தங்களுக்குள் அடைத்திருந்த வாழ்க்கையை மீண்டும் திறக்கத் துணிந்தார்கள்.


கீதா அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து முடித்தாள்.


திருமண அழைப்பிதழ் வந்த நாளில்

கீதாவின் அம்மா அதையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.


“இந்த வேலை நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராது” என்று சொன்ன அதே அப்பா இன்று, “நீ பார்த்தது தோல்வியடைந்த வாழ்க்கை இல்லை கீதா… தோல்வியிலிருந்து மீண்ட வாழ்க்கை.” என்றார்.


கீதா சிரித்தாள்.


முற்றும்



முகில் தினகரன்

கோயமுத்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News