போதைப்பொருள் தடுப்பு

போதைப்பொருள் தடுப்பு

போதைப்பொருள் தடுப்பு 

__________________________

போதையை தவிர் வாழ்வை தழுவு !


நிம்மதி வேண்டுமா போதையை விடு !


உன் உயிருக்கு நீனே எதிரியாகாதே !


போதை தரும் இன்பம் தற்காலிகம் அழிவு நிரந்தரம்! 


வேண்டாம் போதை வேண்டும் பாதை! 


போதைக்கு அடிமையாகாதே வாழ்க்கையை தொலைக்காதே !


உன் எதிர்காலம் உன் கையில் போதையை தவிர் !


மதுவும் புகையும் மனிதனுக்கு பகை உன் குடும்பத்திற்கு சிதை !


வாழ்க்கை என்ற பூந்தோட்டம் போதையால் அது போராட்டம்! 


போதை அது நாம் காசு கொடுத்து வாங்கும் வேதனை !


சிந்தித்து செயல்படு போதை உனக்கு எதற்கு !


போதை அது சாவின் பாதை !


போதையில் மோதி பாதையை மாற்றாதே! 


அன்பின் மேல் போதை கொண்டால் ஆயுள் கூடும் !


போதை மேல் போதை கொண்டால் அழிவே கூடும்! 


மேதையை அழிக்கும் போதையை ஒழிப்போம் !


புகைத்தலின் பூரிப்பு வாழ்க்கையின் பாதிப்பு !


வாழ்க்கை என்பது வரம் போதை அதில் விஷம்! 


உயிரை குடிக்கும் மாயவலை உறவை அறுக்கும் கூறுவாள் !


நாளை நமதே என எழுந்திடு நச்சுப்பழக்கம் துறந்திடு !


உழைப்பால் உயரத் துணிந்திடு 

உன்னத வாழ்வை பெற்றிடு!


மயக்கம் தரும் மரண வலை அறிவை அளிக்கும் நச்சு அலை !


நிமிட இன்பம் நிலையான துன்பம் 

மறந்து விடுவாய் இந்த துயரம் !


விழிப்படைவோம் வாழ்வை காப்போம் !


நிமிடப் பொழுதின் போதைக்காக நித்திய வாழ்வு இழக்காதே !


பணத்தை பறிக்கும் குணத்தை அளிக்கும் !


பிணமாய் உன்னை வீதியில் தள்ளும் !

தற்காலிக இன்பம் தற்கொலைக்கு சமம் !


போதை பொருளை தடுப்போம் நலமுடன் வாழ்வோம் !


பெ.திருமுகம்

மணமேல்குடி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%