news Breaking News
clock

மன அழுத்தத்தை குறைக்கும் நிலா பால்!

மன அழுத்தத்தை குறைக்கும் நிலா பால்!


 

அஸ்வகந்தா சூரணம் என்று சொல்லப்படும் பொடி, ஜாதிக்காய் பொடி இரண்டும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.


ஒன்றரை டம்ளர் பசும் பாலை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.


இதில், அரை டீ ஸ்பூன் அஸ்வகந்தா பொடி, கால் டீ ஸ்பூன் ஜாதிக்காய் பொடி சேர்த்து, இத்துடன்


கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், தலா இரண்டு சிட்டிகை மிளகு தூள், லவங்கப் பட்டை பொடி, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.


பால் ஒரு டம்ளர் அளவு குறைந்ததும், அடுப்பை அணைத்து, பாலை வடி கட்டி, பால் வெது வெதுப் பாக ஆறியதும் அரை டீஸ்பூன் சுத்தமான செக்கில் அட்டிய தேங்காய் எண்ணெய் சேர்த்து, இனிப்பு சுவைக்கு தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.


இரவு நேரத்தில் உணவுக்கு சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன், தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன் இந்த நிலா பாலை குடிக்க வேண்டும்.


தொடர்ந்து இப்படி மூன்று மாதங்கள் செய்தால், தூக்கமின்மை பிரச்னை இயற்கையாகவே சரியாகும்.


காரணம் இந்த மூலிகைகளில் டிரை எத்திலின் கிளைக்கால் என்ற வேதிப் பொருளும் ஆன்டி ஆக்ஸ்சிடென்ட் சத்துக்களும் அதிக அளவில் உள்ளன.


இது ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.


தூக்கத்தில் பாதியிலேயே விழிப்பது, தேவை யற்ற சிந்தனைகள், மன அழுத்தம் இவற்றையும் இயற்கையிலேயே சரி செய்து நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.


எந்தப் பிரச்னையும் இல்லாதவர்களும் வாரத்தில் ஒரு நாள் இரவில் நிலா பால் குடிக்கலாம்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News