news Breaking News
clock

மழைநாள் மனம்

மழைநாள் மனம்



கருமேகங்களின் மடியில் 

கருத்த வானத்தின்

வாழ்வைப் பேசும் 

மௌனக் காலை...


ஜன்னல் கண்ணாடியில்

சரியும் சாரலில்

சந்தோஷம் துளிகளாய் சிதற..

சோகம் பெருக்காய் வழிய…


நினைவுகளின் நதியில்

பாய்ந்தோடும் நொடிகள்

நடந்தவை, நடப்பவைகளை

இணைக்க...


குடை மறந்த 

தருணங்களில் மனம் 

நனைந்து, நொந்து

வலிகள் வரிகளாக மாற...


மழை முடிந்தபின்

முளைக்கும் காளானாய்...


வீழ்ச்சிக்குப் பிறகே

அலங்கரிக்கும் வாழ்வு .


மழைநாள் மனம்...


சில நேரம் நிசப்தம்,

சில நேரம் சலசலப்பு,

முழுவதும் உணர்வாய்

புதிய நம்பிக்கையுடன்…


அன்புடன், அமைதியாக

நம்முள் மெதுவே

தங்கும் வாழ்வு


நா.பத்மாவதி

கொரட்டூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News