news Breaking News
clock

மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு : 35 பேர் காயம்

மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு : 35 பேர் காயம்



தஞ்சாவூர், பிப்.

- தஞ்சாவூர் மாவட்டம் மாதா கோட்டையில் லூர்து மாதா ஜல்லிக் கட்டு பேரவை சார்பில், புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 35 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முன்பு தஞ்சாவூர் கோட்டாட்சியர் ப.நித்யா தலைமையில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதைத்தொடர்ந்து, வாடி வாசலில் இருந்து தஞ்சாவூர், புதுக் கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களி லிருந்து 700 காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. காளைகளைப் பிடிக்க மொத்தம் 400 வீரர்கள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு களமிறக்கப்பட்டனர். காளைகளை அடக்கியவர்களை வெற்றி பெற்ற வர்களாக அறிவித்து, அவர்களுக்கு சைக்கிள், டைனிங் டேபிள், சில்வர் பாத்திரம் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டன. மாடுகள் பிடிபட வில்லை என்றால், மாட்டின் உரிமை யாளருக்கு பரிசு அளிக்கப்பட்டது. இப்போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வை யாளர்கள் உள்பட மொத்தம் 35 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 17 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News