சிதம்பரம், பிப். –
சர்வதேச மருத்துவ பயனாளிகள் பாதுகாப்பு சங்க கருத்தாய்வில் மகப்பேறு மருத்துவத்தில் செவிலியர்கள் மேலாண்மைக்கான சிறந்து விருது சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடந்த ஆண்டு தமிழகஅரசால் சிறந்த மகப்பேறு மருத்துவர் விருது பெற்ற சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கே.ராகுல் ஆனந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச மருத்துவ பயணாளிகள் பாதுகாப்பு சங்கத்தின்கருத்தரங்கில் 29 நாடுகளில் இருந்து 800 மருத்துவமனைகள் பங்கேற்றன. இந்த நாடுகளில் மருத்துவத்துறையில் நடைபெற்ற மிகச்சிறப்பான சிகிச்சைகள் குறித்து கருத்தாய்வு செய்தனர்.
மகப்பேறு மருத்துவத்தில் செவிலியர்கள் மேலாண்மை என்ற தலைப்பிலான கருத்தாய்வில் அரசு மருத்துவமனையான சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையை தேர்வு செய்து சிறந்து விருது வழங்கியுள்ளனர். இந்த விருதை சூடான் நாட்டைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சரிடமிருந்து செவிலியர் புஷ்பலதா பெரியநாயகம், அறுவை அரங்க செவிலியர் புவனேஸ்வரி லோகநாதன் ஆகியோர் பெற்றனார்.
பிரசவத்திற்கு பிறகு ஏற்படுகிற ரத்தப்போக்கு மகப்பேறு மரணங்களுக்கான முதன்மையான காரணமாக உள்ளது. சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்றாலும் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக ரத்தப்போக்கினால் மரணங்கள் ஏற்படவில்லை. இதற்கு முழு முதல் காரணமாகவும், முதுகெலும்பாகவும் உள்ளவர்கள் செவிலியர்கள்தான். மருத்துவர்களாகி நாங்கள் பல்வேறு பணியில் இருந்தாலும், பிரசவத்திற்கு வரும் மகளிர்களை உன்னிப்பாக கவனித்து ரத்தம்போவது தொடங்கும் போதே கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிப்பதால் மரணங்கள் தவிர்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் வழிகாட்டுதல்படி தேசிய சுகாதார திட்ட இயக்குநர் மருத்துவமனையை ஆய்வு செய்து ரூ.1.50 கோடி மதிப்பிலான உயரிய மருத்துவ உபகரணங்களை வழங்கி இந்த சேவை தொடர ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
இந்த விருதினை செவலியர்கள் சமூகத்திற்காகவும், மருத்துவமனையில் பயன் பெற்ற தாய்மார்களுக்கும் அர்ப்பணிக்கிறோம் என மகப்பேறு மருத்துவர் கே.ராகுல் ஆனந்து தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?