விமானப் படையிடம் ஒப்படைக்க 5 தேஜஸ் எம்கே1ஏ விமானங்கள் தயார்: எச்ஏஎல் நிறுவனம் அறிவிப்பு
புதுடெல்லி: விமானப் படையிடம் ஒப்படைக்க 5 தேஜஸ் எம்கே1ஏ ரக போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) உள்நாட்டில் தேஜஸ் இலக ரக போர் விமானத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் எச்ஏஎல் நிறுவனத்திடம் விமானப்படை 83 தேஜஸ் எம்கே1ஏ ரக விமானங்களை தயாரிக்க கடந்த 2021-ம் ஆண்டு ஆர்டர் கொடுத்தது. அதன்பின் 97 தேஜஸ் எம்கே1ஏ ரக விமானங்களை ரூ.62,370 கோடி மதிப்பில் தயாரிக்க கடந்த 2025-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
தேஜஸ் போர் விமானங்களை தயாரித்து வழங்குவதில் எச்ஏஎல் நிறுவனம் தாமதப்படுத்துவதாக விமானப்படை தளபதியே ஒருமுறை குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த எச்ஏஎல் நிறுவனம் தேஜஸ் போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் அமெரிக்க தயாரிப்பு ஜிஇ இன்ஜினை பெறுவதில் தாமதம் ஏற்படுவதால், தேஜஸ் போர் விமானத்தை குறித்த நேரத்தில் விநியோகம் செய்ய முடியவில்லை என கூறியது.
இந்நிலையில் எச்ஏஎல் நிறுவனம் விடுத்துள்ள செய்தியில், ‘‘அமெரிக்கவின் ஜிஇ நிறுவனத்திடம் இருந்து 5 இன்ஜின்கள் இதுவரை வந்துள்ளன. அந்த இன்ஜின்கள் பொருத்தப்பட்டு 5 தேஜஸ் எம்கே1ஏ ரக விமானம் விமானப்படையிடம் ஒப்படைக்க தயார் நிலையில் உள்ளது.
ஐஎம்ஆர்எச் ஹெலிகாப்டர், தேஜஸ் எம்கே2 போன்ற விமானங்கள் தயாரிப்பில் எச்ஏஎல் 2032-ம் ஆண்டுக்கு பிறகு ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என தெரிவித்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?