மாத்தூரில் இருந்து புறப்பட்ட 500 இளைஞர்கள் திருப்பத்தூர் மாநாட்டில் பங்கேற்பு!
செய்யாறு, பிப். 15 -
திருப்பத்தூரில் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' முதல்வர்
மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற மாநாட்டிற்கு, செய்யாறு அடுத்த மாத்தூரில் இருந்து தி.மு.க., இளைஞர்கள் 500 பேர் வாகனங்களில் பொறுப்பாளர்களுடன் அணிவகுத்துச் சென்றனர்.
திருப்பத்தூரில் தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் தலைமையில் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' தமிழகத்தின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட ( பிஎல்ஏ 2 - பிடிஏ - பிஎஸ்சி ) ஆகிய இளைஞர்களுக்கான பயிற்சி மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக செய்யாறு சட்டசபை தொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் இருந்து மேனலூர், சுருட்டல், கணிகிலுப்பை, ஏழாச்சேரி, மாத்தூர் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த 500 இளைஞர்களை கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர்
எம்.கே.கார்த்திகேயன் ஆகியோரது ஏற்பாட்டில் நான்கு பஸ்களில் அழைத்துச் சென்றனர்.
இந்த இளைஞர்கள் அனைவரும் நேற்று காலை 10 மணி அளவில் செய்யாறு அடுத்த மாத்தூர் கிராம எல்லையில் ஒன்றிணைந்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து பஸ்களில் புறப்பட்டு திருப்பத்தூருக்குச் சென்றனர். இவர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவற்றை மேற்கண்ட பொறுப்பாளர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேபோல் செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தி.மு.க., பொறுப்பாளர்கள் தலைமையில் இளைஞர்களை, திருப்பத்தூரில் நடந்த பயிற்சி மாநாட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனால் செய்யாறு பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?