வேலூர், பிப். 15-
வேலூர் மாவட்டம்,
அணைக்கட்டு வட்டம்,
ஸ்ரீபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள
புகழ் பெற்ற ஸ்ரீநாராயணி அம்மன் பொற்கோயிலில், அதன் நிறுவனர்.
ஸ்ரீசக்தி அம்மா தலைமையில்,
"இவ்வாண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள 10,12- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் தேர்வு எழுதி
அதிக மதிப்பெண்கள் பெற்று
வெற்றி பெற வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தில்,
பிப்.14-அன்று ஸ்ரீசரஸ்வதி
மகா யாக பூஜை நடந்தது. இந்த பூஜை செய்து சுமார் 2000 மாணவ,
மாணவிகளுக்கு (பேனாக்கள்) எழுதுகோல்கள்
வழங்கி ஆசீர்வதித்தார்.
இந்த நிகழ்ச்சியில்,
இதய அறுவை சிகிச்சை மருத்துவர் சௌத்திரி, டாக்டர்.லீம் ஆகியோர்
சிறப்பு அழைப்பாளர்களாக
பங்கேற்று சிறப்பித்தனர். இந்த ஆண்டு பொது தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் பயபக்தியுடன் இந்த எழுதுகோல்களை ஸ்ரீ சக்தி அம்மாவின் கரங்களில் இருந்து பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. இந்த மகா யாகத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு அறுசுவை மதிய உணவு அளித்து அழகு பார்த்தார் ஸ்ரீ சக்தி அம்மா.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?