வாடிப்பட்டி, ஜன.27-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி மற்றும் கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 77வது குடியரசு தின மாவட்ட அளவிலா ன தாய் கோப்பை கபாடி வாலிபால் விளையாட்டுப் போட்டிகள் 3 நாட்கள் நடந்தது. இதில் கபடி போட்டியில் மதுரை எம் சி பள்ளி அணி முதல் பரிசு ரூ.15ஆயிரமும் சுழல் கோப்பையும்,இரண்டாம் பரிசு பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளி அணி ரூ.12 ஆயிரமும் சுழல் கோப்பையும்,மூன்றாவது பரிசு சோழவந்தான் கார்த்திக் நண்பர்கள் குழு ரூ.10ஆயிரமும் சுழல் கோப்பையும், நான்காம் பரிசு திருப்பரங்குன்றம் எஸ்.பி. வி. எம் பள்ளி அணி ரூ.8 ஆயிரமும் சுழல் கோப்பையும் பெற்றது.அதேபோல்
வாலிபால்போட்டியில் மதுரை எஸ்.டி. ஏ.டி.விளையாட்டு விடுதி அணி முதல் பரிசும் சுழல் கோப்பையும்,பாலமேடு பத்ரகாளி அம்மன் மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாம் பரிசு சுழல் கோப்பையும் ,சின்ன கட்டளை எஸ் எஸ் பி எம் பள்ளி அணி மூன்றாம் பரிசும் சுழல் கோப்பையும், வாடிப்பட்டி தாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி நான்காம் பரிசு சுழல் கோப்பையும் பெற்றது.
இதன் பரிசளிப்பு விழாவிற்கு தாய் பள்ளி தாளாளர் எஸ் வி காந்தி தலைமை தாங்கி பரிசு வழங்கினார். பள்ளி மேலாளர்கள் வெங்கடேஷ், மீனாட்சிசுந்தரம், தலைமை ஆசிரியர் காளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாக அதிகாரி முருகேசன் நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?