*சோகத்தூர் ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் லட்சார்ச்சனை வைபவம்*
Jan 26 2026
53
வந்தவாசி, ஜன 27:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சோகத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அமிர்த வல்லி நாயிகா சமேத ஸ்ரீ யோக நரசிம்மர்
திருக்கோயிலில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் நரசிம்ம மூர்த்திக்கு 2 ஆம் ஆண்டு உற்சவம்
முன்னிட்டு லக்ஷ்ர்ச்சனை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முதலில் கலச பூஜை வழிபாடு நடைபெற்றது. பிறகு புதிய வஸ்திரம், பூமாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் உதிரி பூக்கள் கொண்டு லக்ஷ்ர்ச்சனை வைபவம் நடந்தேறியது. தொடர்ந்து சாற்றுமுறை மற்றும் உலக நன்மைக்காக கூட்டுப் பிராத்தனை வழிபாடு செய்யப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?