மின்சார ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தகராறு: போதை இளைஞரை ஆர்பிஎஃப் காவலர் தாக்கிய வீடியோ வைரல்

மின்சார ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தகராறு: போதை இளைஞரை ஆர்பிஎஃப் காவலர் தாக்கிய வீடியோ வைரல்


 

சென்னை: மின்​சார ரயி​லில் டிக்கெட் எடுக்​காமல் டிடிஇ-​யிடம் தகராறில் ஈடு​பட்ட போதை இளைஞரை ஆர்​பிஎஃப் காவலர் கழுத்​தில் கால் வைத்து தாக்​கியது தொடர்​பான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.


சென்னை சென்ட்​ரலில் இருந்து கும்​மிடிப்​பூண்​டிக்கு கடந்த 11-ம் தேதி ஒரு மின்​சார ரயில் புறப்​பட்​டது. இந்த ரயி​லின் முதல் வகுப்பு பெட்​டி​யில் மது போதை​யில் ஓர் இளைஞர் பயணம் செய்​த​தாகக் கூறப்​படு​கிறது.


அவரை டிக்கெட் பரிசோதகர் சோதித்​த​ போது, அந்த நபர் டிக்கெட் இன்றி பயணிப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அந்த நபரை டிக்கெட் பரிசோதகர் கீழே இறக்​கி, அபராதம் விதிக்க முயன்​றார்.


அதனால் ஆத்​திரமடைந்த அந்த இளைஞர், டிக்கெட் பரிசோதகரிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார். இதுகுறித்து ஆர்​பிஎஃப் போலீ​ஸாரிடம் டிக்கெட் பரிசோதகர் தெரி​வித்​தார்.


அங்கு வந்த ஆர்​பிஎஃப் காவலர் ஒருவர், இளைஞரை பிடிக்க முயன்​ற​போது இரு​வருக்​கும் இடையே கைகலப்பு ஏற்​பட்​டது. பின்​னர் அந்த இளைஞர் தப்ப முயன்​ற​போது, திரு​வொற்​றியூர் ரயில் நிலைய நடைமேடை​யில் பொது​மக்​கள் முன்​னிலை​யில் இளைஞரை தரை​யில் தள்ளி கழுத்​தில் கால் வைத்து தாக்​கும் காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவின.


இச்​சம்​பவம் குறித்​து, கொருக்​குப்​பேட்டை ரயில்வே போலீ​ஸாரிடம் கேட்​ட​போது, மது​போதை​யில் பயணித்த இளைஞர், கொருக்​குப்​பேட்​டைச் சேர்ந்த தர்​மன் (22) என்​பதும், இவர் மீது தண்​டை​யார்​பேட்டை ஆர்​பிஎஃப் போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்​து, அபராதம் விதித்து அனுப்​பியதும் தெரிய​வந்​தது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%