மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
Dec 03 2025
53
மின்சார சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கரூர் மாவட்ட கூட்டுக் குழு சார்பில், கரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் க.தனபால் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், எம்பாளய்ஸ் பெடரேசன் திட்ட தலைவர் விஜயகுமார், ஒர்க்ஸ் பெட்ரேசன் திட்டச் செயலாளர் பிரேமா, பொறியாளர் சங்கம் கரூர் திட்ட தலைவர் ம. சரவணகுமார், திட்டச் செயலாளர். கோபி, பொறியாளர் கழகம், திட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் எம்.பால்ராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?