ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 தென்னக ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில் நிலையங்களில், தஞ்சாவூர் - கும்பகோணம் இடையே உள்ள பாபநாசம் ரயில் நிலையம் அதிக போக்குவரத்து முக்கியத்துவம் உடையது. இந்த ரயில் நிலையத்தின் அருகில் பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்தச் சாலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. தஞ்சாவூர், திருக்கருகாவூர், மெலட்டூர், திட்டை உள்ளிட்ட ஊர், கிராமங்களுக்குச் செல்பவர்களும் இந்தச் சாலை வழியே செல்கின்றனர். புதிய பேருந்து நிலையம், தாலுகா, நீதிமன்றம், பி.டி.ஓ ஆபிஸ், காவல்நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு இந்தச் சாலை வழியே தான் செல்ல வேண்டும். இந்தச் சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரி, தனியார் வங்கி கிளை, மெடிக்கல், மளிகை, ஜூவல்லரி உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், ரயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம், ஏராளமான வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் நிற்கின்றன. ரயில் சென்ற பிறகு போக்குவரத்து சீரடைய பத்து நிமிடமாகிறது. ஆம்புலன்ஸும் சிக்கிக் கொள்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நாளும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, வாகன ஓட்டிகள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் சிரமத்தை உணர்ந்து, இங்கு மேம்பாலம், அல்லது கீழ் பாலம் அமைத்துத் தருமாறு, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%