news Breaking News
clock

முதலமைச்சரின் ‘தாயுமானவர்’ திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 1.11 லட்சம் பேர் பயன்

முதலமைச்சரின் ‘தாயுமானவர்’ திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 1.11 லட்சம் பேர் பயன்



முதலமைச்சரின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் தற்போது 1,11,312 பயனாளிகள் நன்மை பெறுகின்றனர் என்று கலெக்டர் இரா.பிரிந்தாதேவி “நிறைந்தது மனம்” நிகழ்வில் தெரிவித்தார்.


சேலம் மாவட்டத்தில் உள்ள 1,06,421 மூத்த குடிமக்கள் குடும்ப அட்டைதாரர்கள், 3,844 மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளிட்ட மொத்தம் 1,10,265 குடும்ப அட்டைகளிலிருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மாதாந்திர ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படுவதால் மொத்த பயனடைபவர்கள் எண்ணிக்கை 1,11,312 ஆக உள்ளது.


2025 ஆகஸ்ட் 12 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டிலேயே ரேஷன் பொருட்கள் வழங்கும் நோக்கத்துடன் முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார். இதன் பின்னர் சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன், கருப்பூர் பகுதியிலுள்ள பலரின் இல்லங்களுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கி திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.


ஆகஸ்ட்–செப்டம்பர் 2025 மாதங்களில் மட்டும் 92,998 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. அக்டோபர் முதல் குடும்ப அட்டையில் 65–70 வயது உடைய 17,267 பேர் புதிய பயனாளிகளாக சேர்க்கப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1.11 லட்சமாக உயர்ந்துள்ளது.


விநியோகத்தை எளிதாக்க மாவட்டம் முழுவதும் 1,207 குழுக்கள் அமைக்கப்பட்டு, 1,447 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 70 குடும்ப அட்டைகளுக்கு 1 வாகனம், மலைப்பகுதியில் 50 குடும்ப அட்டைகளுக்கு 1 வாகனம், கிராமப்பகுதியில் 60 குடும்ப அட்டைகளுக்கு 1 வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டிசம்பர் 2 மற்றும் 3, 2025 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.


பயனாளிகள் பேசும்போது,


மேட்டூர், குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த அமராவதி (77) கூறும்போது,


“நியாய விலைக் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவது எனக்கு கடினமாக இருந்தது. சில மாதங்களில் வாங்கவே முடியாது. இப்போது ரேஷன் பொருட்கள் வீட்டிலேயே கிடைக்கிறது. என் சிரமம் நீங்கிவிட்டது. முதலமைச்சருக்கு நன்றி,” என்றார்.


சேலம் தெற்கு, சின்ன சீரகாபாடியைச் சேர்ந்த சின்னசாமி (78) கூறுகையில்,


“அரிசி, சர்க்கரை, பாமாயில் வாங்க நியாய விலைக் கடையில் நிற்க வேண்டிய சிரமம் இருந்தது. பிறரை நாட வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இப்போது வீட்டிலேயே ரேஷன் கிடைக்கிறது. இது முதியோருக்கு பெரிய வரம்,” என்று தெரிவித்தார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News