மும்பையில் 4 வழி மேம்பாலம் திடீரென 2 வழியாக மாறும் புகைப்படம் - ‘ஆபத்து இல்லை’ என எம்எம்ஆர்டிஏ விளக்கம்
Jan 30 2026
15
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே மீரா- பயந்தர் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் 4 வழிகளில் இருந்து திடீரென 2 வழிகளாக குறுகிச் செல்வது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த மேம்பால கட்டமைப்பில் எந்தவித வடிவமைப்பு குறைபாடும் இல்லை. அதேபோன்று ஆபத்தும் இல்லை என்று மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் (எம்எம்ஆர்டிஏ) விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில், ”மேம்பாலத்தின் தற்போதைய வடிவமைப்பு என்பது இடவசதி மற்றும் எதிர்கால விரிவாக்க திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. பயந்தர் (கிழக்கு) நோக்கி இரண்டு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் பயந்தர் (மேற்கு) பகுதியை இணைக்க கூடுதலாக இரண்டு வழிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே வழித்தடத்தைக் கடந்து பாலத்தை நீட்டிக்கும்போது இந்தச் சிக்கல் சரியாகிவிடும்” என்றனர்.
அதிகாரிகளின் இந்த பதிலை சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியா நிராகரித்துள்ளார். ”கடந்த 2022-ல் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்ததற்கு பாலத்தின் தவறான வடிவமைப்பே காரணம். அதே தவறை எம்எம்ஆர்டிஏ மீண்டும் செய்கிறது” என்று தமானியா குற்றம்சாட்டியுள்ளார்.
வழக்கறிஞர் கிருஷ்ணா குப்தா கூறுகையில்,”பொதுமக்கள் உயிருடன் அதிகாரிகள் விளையாடுகிறார்கள். தரமற்ற பணிகளுக்காக முன்பு கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனம் இப்போதும் பணிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?