மூன்று வாரமாக முடங்கி இருக்கும் அமெரிக்க அரசு

மூன்று வாரமாக முடங்கி இருக்கும் அமெரிக்க அரசு



நியூயார்க்,அக்.27- அமெரிக்க அரசு மூன்றாவது வாரமாக முடங்கி யுள்ளது. இதனால் 14 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் உள்ளனர். இதில் பலர் கட்டாய விடுப்பில் உள்ளனர். பலர் ஊதியம் இல்லாமல் வேலை செய்து வருகின்றனர். அரசு முடக்கத்தின் பின்னணி கடந்த ஜூலை மாதம் டிரம்ப் கையெழுத்திட்ட “ஒன் பியூட்டிபுல் பில் மசோதாவை” அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார். இம்மசோதா அரசு செலவினங்களை குறைப்ப தற்காக சுகாதாரத் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை வெட்டுவதற்கு வழிவகை செய்கிறது. இந்த நிதி வெட்டப்பட்டால் சுகாதாரச் சேவை பெற்று வருகிற சுமார் 7 கோடி மக்களை நேரடியாகப் பாதிக்கும். குறைந்த ஊதியம் பெரும் மக்களின் வாழ்க்கைக் கான அத்தியாவசியச் செலவுகளை மேலும் அதிகரிக்கும் ஆபத்து உருவாகிவிடும். மேலும் இந்த முடக்கம் நவம்பர் வரை தொ டர்ந்தால், 4.2 கோடி அமெரிக்க மக்களுக்கு வழங்கப்படும் துணை ஊட்டச்சத்து உதவித் திட்டம். 70 லட்சம் பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு துணை ஊட்டச்சத்து திட்டமும் முடங்கும். இது அமெரிக்கா மக்களின் உணவு பாதுகாப்பை அழித்து விடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் கொண்டு வந்த இம்மசோதா தொடர்பாக ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஜனநாயகக் கட்சி யினர் குடியரசுக் கட்சி முன்மொழிந்த நிதி மசோ தாவிற்கு ஆதரவு கொடுக்க மறுத்து விட்டனர். எனவே அக்டோபர் 1 முதல் அந்நாட்டு அரசு முடங்கியுள்ளது. பழி சுமத்தும் நடவடிக்கை இந்நிலையில் தற்போதைய நிதி முடக்கத் தைத் தொடர்ந்து மக்கள் கேள்வி எழுப்பி விடக் கூடாது என்பதற்காக, இரு கட்சிகளும் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த முடக்கத்திற்கு ஜனநாயகக் கட்சிதான் காரணம் என டிரம்ப் விமர்சிக்கும் அதே வேலை யில் நிதி முடக்கம் துவங்கிய பிறகு எட்டு அரசு நிறுவனங்களில் இருந்து சுமார் 4,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகத்திற்கு டிரம்ப் உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கில் பணி நீக்கம் செய்யக்கூடாது என அந்நாட்டின் கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட நிலையில் இந்தப் பணிநீக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஜனநாயகக் கட்சியினர் ஆளும் மாகாணங்கள் மற்றும் நகரங்களை முடக்கும் வகையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயை (28 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) டிரம்ப் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%