news Breaking News
clock

மேற்காசியாவில் அமெரிக்கா ராணுவப் பயிற்சி

மேற்காசியாவில் அமெரிக்கா ராணுவப் பயிற்சி



டெஹ்ரான்,ஜன.

- மேற்காசியாவில் அமெரிக்கா ராணுவப் பயிற்சி நடத்த உள்ளது. இது அப்பிராந்தியத்தில் பதற்றத்தை உரு வாக்கியுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் போக்கு அதிக ரித்து வருகிறது. இதன் பின்னணியில் ஈரானை நோக்கி அமெரிக்கா தனது கடற் படையை நகர்த்தியுள்ளது. இச்சூழலில் மேற்காசியாவில் பல நாட்கள் நீடிக்கக் கூடிய பிரம்மாண்டமான விமானப் படைப் பயிற்சியை நடத்தவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ‘ஆபிரகாம் லிங்கன்’ (Abraham Lincoln) விமானம் தாங்கிப் போர்க்கப்பல் மேற்காசியா சென்றடைந்ததாக அறிவிக்கப்பட்ட மறுநாளே இந்தப் பயிற்சி குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. மேற்காசியா முழுவதும் போர் விமா னப் பலத்தை “நிலைநிறுத்துவது, பரவலாக்குவது மற்றும் நிலைநிறுத்திப் பராமரிப்பது” போன்ற திறன்களை இந்தப் பயிற்சி வெளிப்படுத்தும் என்று அமெ ரிக்க மத்திய கட்டளைத் தளத்தின் (CENTCOM) விமானப் படைப் பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும், இந்தப் பயிற்சி நடைபெறும் தேதி அல்லது துல்லியமான இடம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட வில்லை.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News