யுஜிசி விதிமுறைகளில் பாகுபாடு இல்லை: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி

யுஜிசி விதிமுறைகளில் பாகுபாடு இல்லை: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி


 

புதுடெல்லி: உயர்​கல்வி நிறு​வனங்​களுக்​கான புதிய விதிமுறைகளில் பாகு​பாடு காட்​டப்​ப​டாது என மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் விளக்​கம் அளித்​துள்​ளார்.


பல்கலைக்கழக மாணவர்கள் ரோஹித் வெமுலா மற்​றும் பயல் தட்வி ஆகியோரின் மரணத்​தைத் தொடர்ந்​து, அவர்​களது தாய்​மார்​கள் தொடர்ந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், 2012ம் ஆண்​டின் பழைய விதி​முறை​களை மறு​பரிசீலனை செய்​யு​மாறு பல்​கலைக்​கழக மானியக் குழு​வுக்கு (யுஜிசி) உத்​தர​விட்​டது. இதன் அடிப்​படை​யில், உயர்​கல்வி நிறு​வனங்​களில் சமத்துவத்தை மேம்​படுத்​து​வதற்​கான 2026-ம் ஆண்​டின் புதிய விதி​முறை​களை யுஜிசி கடந்த 13ம் தேதி வெளி​யிட்​டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.


இதையடுத்து இந்த விதி​முறை​களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. அதில், சாதி ரீதியான பாகு​பாட்​டுக்கு ஒரு முழு​மையற்ற வரையறையை தந்துள்​ள​தாக​வும் இதன் மூலம் குறிப்​பிட்ட சில பிரி​வினருக்கு கிடைக்க வேண்​டிய நிறுவன ரீதி​யான பாது​காப்பை இது மறுப்பதாக​வும் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.


இதுகுறித்து மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் செய்தியாளர்​களிடம் கூறும்​போது, "யார் மீதும் பாகு​பாடு காட்டப்ப​டாது. அதே​போல, பாகு​பாடு என்ற பெயரில் இந்த விதிமுறை​களை யாரும் தவறாகப் பயன்​படுத்​த​வும் அனுமதிக்கப்ப​டாது. மத்​திய, மாநில அரசுகள் மற்​றும் யுஜிசி ஆகிய​வற்​றுக்கு இதில் பொறுப்பு உள்​ளது. அனைத்து நடவடிக்கைகளும் இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் வரம்புக்கு உட்​பட்டே அமை​யும்" என்​றார்.


பாகு​பாடு குறித்த புகார்​களை விசா​ரிக்க ஒவ்​வொரு நிறு​வனத்​தி​லும் ஒரு குழு அமைக்​கப்பட வேண்​டும். இதில் ஓபிசி, எஸ்​சி, எஸ்​டி, மாற்​றுத்​திற​னாளி​கள் மற்​றும் பெண்​களுக்கு பிர​தி​நி​தித்​து​வம் அளிக்​கப்பட வேண்​டும். பின் ​தங்​கிய மாணவர்​களுக்கு கல்வி, நிதி சார்ந்த ஆலோ​சனை​களை வழங்க இந்த மையம் செயல்​படும். கல்வி நிறுவன வளாகத்​துத்​குள் எவ்​வித பாகு​பாடும் நடக்​காமல் இருப்​பதை கண்​காணிக்​க படைகள்​ உரு​வாக்​கப்​படும்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%