' ரம்மு...அடியே ரம்மு !"
அடுக்களையில் இருந்த ரம்யா பாட்டி
கணவரின் கிண்டலான அழைப்பைக்
கேட்டு கடுப்படைந்து வெளிப்பட்டார்.
" தெரியாமத்தான் கேட்கறேன் ரம்யா ன்னு அழகா பேர் வச்சிருக்கா. அதெ ன்ன ரம்மு, விஸ்கின்னு கூப்ட றது!"
" அடேடே! ட்ரிங்க்ஸ் பேரெல்லாம்
கரெக்டா சொல்றயே. சின்ன வயசில
குடிக்கற பழக்கம் உண்டா ?" கலாய்த்
தார் தாத்தா.
" ஆமா..அது ஒண்ணுதான் கொறை
ச்சல்.." என்று வெறுப்புடன் கூறிய
பாட்டி, தொடர்ந்து, " இனிமே அப்படி
ஏடா கூடமா கூப்டா நான் திரும்பிப்
பாக்க மாட்டேன் நியாபகம் வச்சுக்
கோங்க !" என்று மிரட்டினார்.
" அடி ரம்மு உன்னை அப்படிக் கூப்டற துல ஒரு கிக் வரதுடி!"
" அப்படியென்ன கிக் வேண்டிக் கெடக்கறது ?..சரி.எதுக்கு இப்போ
கூப்பிட்டேள்?"
" இல்ல.ஆமே வெறிச்சோடிக் கெ
டக்கு! எல்லாரும் எங்க போயி
ருக்கா?"
" தீம் பார்க்காம். அங்க போயிரு
க்கா. நீங்க நன்னா அசந்து தூங்
கிண்டிருந்தேள். எழுந்ததும் சொ
ல்லச் சொன்னா. "
" நான் மூஞ்சி அலம்பிண்டு வரேன். லோடாவுல காஃபி ரெடி பண்ணி வை. சாப்டுட்டு நாமளும் கெளம்ப லாம்."
" எங்க கெளம்பறது ?"
" நம்ம நகர்ல இருக்கற பார்க்குக்
குதான். "
".........."
" என்னடி யோசனை? உன்னையாரா வது கிட்நாப் பண்ணிடுவாளோன்னு பயமா?"
" ஆமா...நான் சின்னப்பொண்ணு
பாருங்க! என்னத் தூக்கிண்டு போகப் போறா! "
" ஒருவேளை என்கூட வர வெட் கமா...அப்படின்னா ஒண்ணு செய்.நீ முன்னாடி நட.நான் பின்னாடி பத்தடி இடைவெளி விட்டு ஃபாலோ பண்றேன் !"
" ஐயோ ! ஏன் இப்படி அபத்தமாபேச றேள்?"
" சரி என்ன தயக்கம் சொல்லு!"
" இருங்க..மொதல்ல மூஞ்சி அலம்
பிண்டு வாங்கோ . சூடா காஃபி
போட்டு எடுத்துண்டு வரேன்."
தாத்தா முகம் அலம்பிண்ட கையோடு பாட்டி கொடுத்த காஃபியை ஓரே விழுங்கில் காலி செய்தார். லோட்டா வை அருகில் இருந்த டீபாமீது வைத்
தார்.
" இப்போ சொல்லு !"
" வேற ஒண்ணுமில்ல..இன்னிக்கு
சாயங்காலம் டி.வியில நல்ல படம்
போடறாளாம்! "
" படம் பேரென்ன?"
" ரம்பையின் காதல். "
" எத்தன தடவை பார்ப்பே?"
" அருமையான படம் ! சுடுகாட்டுல
சாமியார் பாடற பாட்டை இன்னிக்
கெல்லாம் கேட்டுண்டிருக்கலாம்!"
" அதாவது ' சமரசம் உலாவும் இடமே'
ங்கற பாட்டுதானே ?"
" ஆமான்னா.."
" சரிதான் .உனக்கு வயசாகிடித்துங் கறத ப்ரூவ் பண்றே!"
" எப்படி ?"
" சுடுகாட்டப் பத்திப் பேசறயே!"
" ' சமரசம் உலாவும் இடமே'ங்குற
பாட்டுல எவ்வளவு தீர்க்கமான அர்த்த ங்கள்! எல்லாக் காலத்துக்கும் பொரு த்தமான சாகாவரம் பெற்ற பாட்டு !"
" சரி..." என்றவர் பாட்டி அருகில் வந்து நின்றார்
" அப்போ நான் டிரஸ் பண்ணிண்டு
கெளம்பவா...ரம்பையின் காதலா இல்ல ரம்யாவின் காதலாங்குறத நீ முடிவு பண்ணிக்கோ!"
சட்டென பாட்டியின் கன்னம் வெட்க த்தில் சிவந்தது. கணவரை ஓரக் கண் களால் பார்த்து புன் சிரிப்பொன்றை
உதிர்த்தார்.
தாத்தாவுக்கு உடனே குஷி வர தன் பொக்கை வாயால் ' உய்' யென்று விசிலடித்தார.
.......................
வி.கே.லக்ஷ்மிநாராயணன்