ரூ.36,968 கோடி முதலீட்டில் 71 புதிய திட்டங்கள்: ஸ்டாலின் அடிக்கல்
60,823 பேருக்கு வேலை வாய்ப்பு
சென்னை, பிப். –
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில், 36,968 கோடி ரூபாய் முதலீட்டில் 60,823 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 31,934 கோடி ரூபாய் முதலீட்டில் 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 52 முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
மேலும், 5,000 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலை வாய்ப்பு என்ற வகையில், 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தூத்துக்குடி காய்னீஸ் (Kaynes) டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் பிரிண்டட் சர்க்யூட் போர்ட்ஸ் (PCB), HDI PCB, பிளக்சிபிள் PCB உற்பத்தி திட்டத்திற்கான (இதன்மூலம், தூத்துக்குடி ஒரு மிகப்பெரிய மின்னணு உற்பத்தி மையமாக உருவாகும்.)
ஆஸ்ட்ரா ஜெனிகா (Astra Zeneca) நிறுவனத்தின் உலகளாவிய திறன் மைய விரிவாக்கத்தைத் துவக்கி வைத்தார்.
ஜெர்மன் அரசுடன்...
முதலமைச்சரின் ஜெர்மனி அரசுப் பயணத்தின்போது, Knorr Bremse நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரயில்வேத் துறையில், ஈர்க்கப்பட்டுள்ள மிகப்பெரிய திட்டமாகும் இது. ரயில்களுக்கான, கதவுகள் மற்றும் பிரேக்குகள் உற்பத்தி செய்வதற்கும், தொழில்நுட்ப உற்பத்தி மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் என்று பல்வேறு திட்டங்களில், இந்நிறுவனம் முதலீடு மேற்கொள்ள உள்ளது. சிப்காட் மாம்பாக்கம் தொழிற்பூங்காவில் இதன் உற்பத்தி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
டாபர் நிறுவனம், திண்டிவனத்தில் நிறுவ உள்ளன. பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யவும் இத்திட்டத்திற்கு அடிக்கல்.
மேம்பட்ட மின்னணுவியல் துறையில், முன்னணி நிறுவனமான VVDN நிறுவனம், பொள்ளாச்சியில் தன்னுடைய திட்டத்தை பெரிய அளவில் நிறுவியுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, இந்நிறுவனத்தில் பெருமளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா சால்ட் நிறுவனம், ராமநாதபுரம் மாவட்டத்தில், சிப்காட் வாலிநோக்கத்தில், அமைக்கும்திட்டத்திற்கு அடிக்கல்.
உலகப் புகழ்பெற்ற நிறுவனமான ஜான்சன் எலக்ட்ரிக் நிறுவனம், மோட்டார்கள், மோட்டார் வாகன மின்னணுப் பொருட்கள், உயர்தர காந்தப் பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்திக்காக, ராணிப்பேட்டை சிப்காட் பனப்பாக்கம் வளாகத்தில், திட்டத்திற்கு அடிக்கல்.
இன்றையதினம், அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் தொடங்கப்பட்ட திட்டங்கள், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
7 ஆயிரம் மாணவர்களுக்கு
திறன் பயிற்சி
முதலமைச்சர் முன்னிலையில் பாரத் பயோடெக் நிறுவனம், 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க உள்ள உயிரியல் மற்றும் மருந்துகள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஹுண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் நிறுவனம், 7000 மாணவர்களுக்கு திறன்பயிற்சி மேற்கொள்ளும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன், வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாகுடோ ஐவானகா, B.I.G. டெக் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ராஜு பாண்டியன், நார் பிரெம்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மார்கஸ் பெர், பாரத் பயோ டெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா எல்லா, டாபர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மோகித் மல்கோத்ரா உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.