நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டம் தமிழகத்தில் ரெயில் மறியல் போராட்டம்; கைது

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டம்  தமிழகத்தில் ரெயில் மறியல் போராட்டம்; கைது



சென்னை, பிப். –


மத்திய அரசின் விவசாயம், தொழிலாளர் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் தொழிற் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.


பழைய தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு நவம்பர் 2025-இல் அறிவிக்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், அணுசக்தி துறையை தனியாருக்கு திறந்து விடும் ஷாந்தி சட்டம், மின்சாரத் திருத்த சட்டம், விவசாயிகளை பாதிக்கும் வரைவு விதை மசோதா ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். வி.பி.ஜி ராம் ஜி சட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் பழையபடி அமல்படுத்த வேண்டும். அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் மற்றும் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும், விக்சித் பாரத் - கிராமின் மிஷன் 2025 சட்டத்தை ரத்து செய்து, இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஎன்டியூசி, ஏஐடியூசி, எச்எம்எஸ், சிஐடியூ உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.


இதற்கு சையுக்த கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த பாரத் பந்த் போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும், நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் இதன் தாக்கம் இருக்கும் என்றும் ஏஐடியூசி பொதுச் செயலாளர் அமர்ஜீத் கவுர் தெரிவித்திருந்தார்.


கேராளவில் போக்குவரத்து


கடுமையாக பாதிப்பு


மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இன்று காலைமுதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக நாடு முழுவதும் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேரளம், மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் காலைமுதல் தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


கேரளத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் பேருந்து சங்கமும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால், பொதுப் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது..தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக கூட்டணியில் அங்கம்வகிக்கும் ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இருப்பினும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் காலைமுதல் அரசுப் பேருந்துகள் பெரிய அளவிலான பாதிப்பின்றி சீராக இயக்கப்பட்டு வருகின்றன. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட வங்கி அமைப்புகள் இதில் பங்கேற்றதால் ஒருசில பொதுத்துறை வங்கிகளின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.புதுவையில் பேருந்து, ஆட்டோ இயக்கப்படாத நிலையில் மத்திய பாஜக அரசை கண்டித்து 9 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.புதுச்சேரியில் பொது வேலைநிறுத்த போராட்டத்தை ஒட்டி தனியார் பேருந்து, ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%