புதிய பிரதமர் அலுவலகம் "சேவா தீர்த்": இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
Feb 13 2026
14
தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ஐ பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13 ஆம் தேதி (இன்று) திறந்துவைப்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
தலைநகர் தில்லியில் அரசுக் கட்டடங்களை மறுநிர்மாணம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாகப் பிரதமர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது.
இதற்கு முன்னதாக பல ஆண்டுகளாக இருந்த அரசு அலுவலகங்கள் சிதிலமடைந்த நிலையில், மிகப் பழமையான உள்கட்டமைப்பில் செயல்பட்டன. இதனால் செயல்பாட்டுத் திறமையின்மை, ஒருங்கிணைப்பு சவால்கள், அதிகரிக்கும் பராமரிப்பு செலவுகள் என பணிச் சூழல்களுக்கு உகந்ததாக இல்லாமல் இருந்தது.
அதனடிப்படையில், புதிய கட்டட வளாகங்கள் நவீன, எதிர்காலத்திற்கு உகந்த வசதிகளுடன் நிர்வாக செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தில் பிரதமர் அலுவலகம் மட்டுமின்றி மத்திய அமைச்சரவை செயலகம், தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இந்தியா ஹவுஸ் ஆகியவை இடம்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக இது வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்தன.
இந்த நிலையில், பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டத்தின் பெயர் "சேவா தீர்த்" (சேவைத் தலம்) என்றும், கர்த்தவ்ய பவன் (மத்திய அரசின் தலைமைச் செயலகம்) என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும், கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ல் சட்டம், பாதுகாப்பு, நிதி, சுகாதாரம், விவசாயம் மற்றும் பல முக்கிய அமைச்சகங்களை உள்ளடக்கியுள்ளன.
இரண்டு கட்டட வளாகங்களும் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட அலுவலகங்கள், கட்டமைக்கப்பட்ட பொது இடைமுக மண்டலங்கள் மற்றும் வரவேற்பு வசதிகளைக் கொண்டுள்ளன. இவ்வாறு பிரதமர் அலுவலக அறிக்கை வெளியிட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?